சிந்துஜாவின் கணவர் தற்கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் எஸ். சுதன் (26 வயது) அவரது சொந்த ஊரான வவுனியா பணிக்கர் புளியங்குளத்தில் நேற்று(24) இரவு தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் இளம் தாய் ஒருவர் குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கு காரணமாக மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களினால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில் அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பணிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்திருந்தார்.

இந் நிலையில் நேற்று (24) இரவு தவறான முடிவெடுத்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting