26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்த கோபால் பட்டாச்சாரியா அவரது மனைவி சர்ஜூ தேவி என்ற தம்பதிகளுக்கே இந்த அதிசய குழந்தை பிறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் சோனி கூறுகையில், “குழந்தைக்கு 26 விரல்கள் இருப்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால், இது ஒரு மரபணு கோளாறு ஆகும். அதே நேரம் குழந்தையின் தாயாரும் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்” என்றார்.

அந்த குழந்தையின் ஒவ்வொரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் இருந்ததுள்ளது.அதேவேளை, அவர்கள் அந்த குழந்தை தோளகர் தேவியின் அவதாரமாக கருதி அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting