இரட்டைச் சிறுமிகள் மாயம் – வெளியான காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புத்தளம் – முந்தலம பொலிஸ் பிரிவிட்க்குட்பட்ட பிரதேசமொன்றில் 15 வயதுடைய இரண்டு இரட்டைச் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த இருவரும் நேற்று முன்தினம் முதல்(25.07.2023) வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக முந்தலம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல்போயுள்ள இரட்டை பெண் சிறுமியர் தொடர்பில் அவர்களின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முந்தலகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சிறுமிகளின் நண்பர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுடன் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை செல்வதாகவும், அந்த பயணத்திற்கு செல்வதற்கு தாயாரிடம் அனுமதி கேட்டதாகவும் தாய் அனுமதி வழங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமிகள் தமது தாயாரிடம் 500 ரூபாவை கேட்டதாகவும், ஆனால் அந்தத் தொகையை தாய் வழங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting