ஹோட்டல் ஒன்றில் யுவதி துஷ்பிரயோகம் – கோடீஸ்வர வர்த்தகர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினால் நேற்றையதினம் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர் விசாவில் இளைஞர்களை மேலதிக கல்விக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறப்படும் நிறுவனத்தை நடத்திவந்த கோடீஸ்வர வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் யுவதி அவரின் நிறுவனத்தில் பணி புரிபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு கோடீஸ்வர வர்த்தகர் யுவதிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது அழைப்பின் பேரில் யுவதியும் அதே ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு சந்தேக நபர் ஹோட்டலில் சந்திப்பு மண்டபத்தை முன்பதிவு செய்திருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது யுவதி மண்டபத்துக்குச் சென்ற நிலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow on social media
CALL NOW Premium Web Hosting