முல்லைத்தீவில் கடும் போக்குவாதிகள் விகாரைகளுக்கு சென்று பார்வை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கடும்போக்கு சிந்தனைவாதிகள் எனப்படுவர்கள் உள்ளிடவர்கள் பயணம் மேற்கொண்டு குரூந்தூர்மலை விகாரைக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவம் நேற்று (02) நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால் மாவட்ட செயலகத்தில் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன் கொக்குளாய் பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்கள மக்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட ஒய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத்வீரசேகர முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள கோட்டபாய கடற்படைத்தளத்தில் தங்கி கொக்குளாய் பகுதியில் அமைந்துள்ள சம்போதி விகாரைக்கு பயணம் மேற்கொண்டு அங்கு பார்வையிட்டு பௌத்த துறவிகளுடன் கலந்துரையாடிவிட்டு பின்னர் கொக்குளாய் பகுதியில் உள்ள சிங்கள மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதுடன் அவர்களின் குறைகளை கேட்டறிந்துகொண்டுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண முன்னால் ஆளுனராக இருந்த அனுராதா யஹம்பத் குருந்தூர் மலைக்கு சென்று அங்கு பௌத்த வழிபாடுகளை மேற்கொண்டு சென்றுள்ளார்.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்கள் பயணம் மேற்கொண்டு பௌத்த வழிபாட்டு தலங்களை பார்வையிட்டுள்ளமையும் சிங்கள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளமையும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting