தனது கணவனை கொலை செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்த சந்தேகத்தின் பேரில் மனைவியை நேற்றையதினம் (23) ஆனமடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபரான பெண் தனது கணவரின் நெருங்கிய நண்பருடன் தகாத உறவைப் பேணியிருந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில், பெண்ணுடன் தகாத உறவை வைத்தார் என கூறப்படும் நண்பர் உட்பட மேலும் நால்வரை ஆனமடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவத்தின்போது வாள்வெட்டுக்கு இலக்கான கணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கத்திகள் ஆறொன்றிலிருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Follow on social media