தாயாரின் பேஸ்புக் காதலனால் 7 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் தாயாரையும் காதலனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸ் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெண்ணின் கணவன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில் அப் பெண் பேஸ்புக் மூலம் பல ஆண்களுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார்.
அதில் ஒருவருடன் மிக நெருக்கமாகப் பழகிய நிலையில் அந்நபர் அடிக்கடி பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்ததுடன் தொடர்புகளை பேணியும் வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினம் அப் பெண்ணின் 7 வயது மகளிடம் தாயின் காதலன் பாலியல் சேஷ்டை புரிந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு சிறுமியின் தாய் துணையாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சிறுமி, தனது மாமி முறையான ஒருவரிடம் தெரிவித்த்ததை அடுத்து , சிறுமியின் பாட்டியிடம் அப்பெண் விடயத்தை கூறியுள்ளார்.
அதன் பின்னரே கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவில் முறைப்பாடு ஒன்றுசெய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாணைகளின் படி தாயும் கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது , முறைப்பாட்டை விசாரித்த நீதவான் தாயையும், கள்ளக் காதலனையும் தடுத்து வைக்க உத்தவிட்டதாக கூறப்படுகின்றது.
Follow on social media