அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் வெலிகந்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்லேகலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவத்திற்குச் சொந்தமான வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உக்குவெல பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் இராணுவ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow on social media