கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்த எரிபொருள் பவுசர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்த எரிபொருள் பவுசர் ஆற்றில் சுமார் 100 மீற்றர் துாரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் பவுஸர் புத்தளம்- கொழும்பு வீதியில் ஆனவிழுந்தாவைக்கு அருகில் உள்ள பத்துளு ஓயாபாலத்தின் பாதுகாப்பு பக்க சுவர்களை உடைத்து பத்துளு ஓயாவில் வீழ்ந்துள்ளது.

இந்தப் பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பத்துளுஓயாவில் நீர் மட்டம் உயர்வினால் குறித்த பவுஸர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பத்துளு ஓயாஓயா ரயில்வே பாலத்தில் நின்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாலத்தில் மோதியதால் நிறுத்தப்பட்ட எரிபொருள் பவுஸரின் சாரதி மிகுந்த பிரயத்தனத்துடன் பவுஸரின் சாரதி ஆசனத்திலிருந்து இறங்கி அதன் மேல் பகுதியில் ஏறி நின்று காப்பாற்றுமாறு சத்தமிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து முந்தலம பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சாரதியை மீட்டுள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting