14 வயது சிறுவன் ஓடிய ஆட்டோ – 2 வயது குழந்தை உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

14 வயதான சிறுவன் ஓடிய ஆட்டோ விபத்துக்குள்ளானதில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் இராகலை – சென் லெணாட்ஸ் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் (15) மாலை இடம்பெற்றுள்ளது.

14 வயது சிறுவன் வீட்டில் உள்ள முச்சக்கர வண்டியில் தனது சகோதரனான இரண்டரை வயது குழந்தையை ஏற்றிக்கொண்டு இராகலை நடுகணக்கு பகுதியை நோக்கி முச்சக்கர வண்டியை செலுத்தியுள்ளளார்.

இதன்போது முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை மீறி கவ்வாத்து செய்யப்பட்ட தேயிலை மலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியிலிருந்து தேயிலை மலையில் வீசுப்பட்டு வீழ்ந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்ததுடன் இச் சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியை செலுத்திய 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்துள்ள குழந்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,

மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்

Follow on social media
CALL NOW Premium Web Hosting