புதைக்கப்பட்டிருந்த 80 வயதுடைய பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து சடலத்தின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சமபவம் தலகிரியாகம தென்னகோன்புர பொது மயானத்தில் இடம் பெற்றுள்ளது.
இதனை கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்னகோன்புர பிரதேசத்தில் வசித்து வந்த 80 வயதான இந்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சடலம் புதைக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் உயிரிழந்தவரின் மகளுக்கு தெரிவித்ததனையடுத்து அவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கலேவெல பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Follow on social media