கண்டியில் முச்சக்கரவண்டி சாரதிகள், சட்டவிரோத மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, நாட்டிலுள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் அறிவித்துள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் நாயகம் இஷான் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று முன்தினம் (29-12-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை, கண்டி நகரிலுள்ள முச்சக்கரவண்டிகளில் பயணிக்க வேண்டாம் என தூதரகங்கள், தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Follow on social media