புதுக்குடியிருப்பு நகரில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள அடைத்தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுமார் 1,200 பணியாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் தீ ஏற்பட்ட வேளையில் 1000 பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

ஊழியர்களின் கடின முயற்சியால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது மின்சாரம் தாக்கியதில் பணியாளர் ஒருவரும், யுவதிகள் இருவரும் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து தீயணைப்பு படையினரும் அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டதோடு, சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting