நீச்சல் தடாகத்தில் மூழ்கி 14 வயது மாணவர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வென்னப்புவ – பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டு இருந்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பன்னல, மாகந்துர பிரதேசத்தில் இந்து 80 மாணவர்கள் சுற்றுலா சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில், சந்தலங்காவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

சடலம் ஹலவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting