மட்டக்களப்பில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி,திருநீற்றுக்கேணி குளம் பகுதியிலிருந்து நேற்று (27) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆரையம்பதியை சேர்ந்த 57வயதுடைய வீரக்குட்டி தவராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறை தெரிவித்தனர்.

கடந்த ஐந்து தினங்களாக குறித்த நபர் காணாத நிலையில் குடும்பஸ்தர் அவரை தேடிவந்த நிலையில் திருநீற்றுக்கேணி குளம் பகுதியில் அவரது பாதணி இருப்பதைக்கண்டு குளப்பகுதியில் தேடியபோது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

குறித்த நபர் வலிப்பு நோயினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டவர் எனவும் மதுபோதைக்கு அடிமையானவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரின் உத்தரவுக்கு அமைய காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுமணிமாறன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தினை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting