மாத்தறையில் தெனியாய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர்நேற்று முன்தினம் மொரவக்க பிரதேசத்தில் பகுதி நேர வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் கொட்டபொல வரல்ல பிரதேசத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோரால் முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்ட மாணவி பழடைந்த வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் முச்சக்கர வண்டியில் அழைத்து வரப்பட்டு வரல்ல பிரதேசத்தில் விட்டுச் சென்றுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து கொஸ்மோதர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்
பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்;
இதற்கு காரணமான சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் அவர்களை கைது
செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.