புதுக்குடியிருப்பில் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 11.10.2022 அன்று இனம் காணப்ப்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலீசாரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிதி ரி.சரவணராஜா முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது தடையவியல் பொலீசார்,மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி ஆர்.றொஹான் மற்றும் பொலீசார் ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது

சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரி தொடர்பில் பகுப்பாய்வு நடத்தி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting