காத்தான்குடியில் 15 வயது சிறுமியான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று (03) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான நேற்று 15 வயதுடைய மகளை வீட்டில் வைத்து தந்தையார் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி 1921 சிறுவர் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் குறித்த சிறுமியின் தந்தையாரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் ஆனுமதித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஈஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Follow on social media