முள் கிளுவை கதியால் குத்தியதில் காயமடைந்த யாழ்.அனலைதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த கு.தம்பிராசா (வயது 70) என்ற முதியவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 31ம் திகதி காலில் முள் குத்திய நிலையில் கொதிவலி காரணமாக அனலைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவர்,
பின்னர் ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்தும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்,
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Follow on social media