கடலில் நீராடச் சென்ற மாணவன் மாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கந்தர- சீத்தகல இயற்கை நீச்சல் தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் 22 வயதான மாணவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவன், காலி- தல்கம்பல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

17 மாணவர்களைக் கொண்ட குழுவொன்று குறித்த தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த போது, மாணவர்கள் மூவர் திடீரென அதிகரித்த கடல் அலையால் அள்ளுண்டு செல்லப்பட்டனர்.

எனினும் இதன்போது இரண்டு மாணவர்கள் காப்பாற்றப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளும் கந்தர பொலிஸாரும் இணைந்து காணாமல் போன மாணவனைத் தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting