ரஷ்யாவின் கொடூர தாக்குதலில் 8 வயது குழந்தை உட்பட 15 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டு வீச்சு தாக்குதலில் 8 வயது குழந்தை உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான போர் 5 மாதங்களை நெருங்கிவிட்ட நிலையில், கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து ரஷ்யா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு உக்ரைனின் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 16 பேர் காயமடைந்ததாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting