மாத்தறை புகையிரத நிலையத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணிக்க ஆரம்பமான சாகரிகா புகையிரதத்தில் ஏற முற்பட்ட இளைஞன் புகையிரதத்திற்கும் நடைமேடைக்கும் இடையில் தவறி விழுந்துள்ளார்.
புகையிரதத்திற்கும் புகையிரத நடைமேடைக்கும் இடையில் சிக்கிய இளைஞனை வெளியே எடுப்பதற்கு சுமார் ஒரு மணிநேரம் எடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திக்வெல்ல வெவ்ருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதான ரூசர விதானகே என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாத்தறையில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் இளைஞன், பணி முடிந்து வீட்டுக்குச் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Follow on social media