வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் 2022 இதன் ஆரம்ப நிகழ்வான பாக்கு தெண்டல் எனும் பாரம்பரிய கைங்கரியம் இன்று 30/05/2022 ( திங்கள்) காட்டா விநாயகர் வழிபாட்டுடன் கண்ணகி அம்மன் மண்டபத்தில் இருந்து ஆரம்பமாகியது இவ் நிகழ்வானது வற்றாப்பளை பொங்கல் நடைபெற இருப்பதை அம்மன் அடியார்களுக்கு அறிவிக்கும் முகமாகவும் ஆரம்பகாலத்தில் பொங்கலுக்கான பொருட்களை வழங்கு பவர்களுக்கு அறிவிக்கும் முகமாக( பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் முகமாக) இவ் கைங்கரியம் கடைப்பிடிக்கப்படுகிறது
வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல்எதிர்வரும் ஆனி மாதம் 13 திகதி 13.06.2022
வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த பொங்கல் வைகாசி மாத பூரணை அன்மித்த திங்கள் நடை பெற்று வருகிறது வழமை வைகாசியில் இரண்டு பூரணை வருமிடத்து இரண்டாவது பூரணையை கிட்டிய திங்கள் பொங்கல் நடை பெறும் இந்த வருடம் 2022 ம் இரண்டாவதாக வருகின்ற வைகாசி பூரணையை அன்மித்த திங்கள் 13/06/2022 வைகாசி பொங்கல்
30/05/2022 பாக்கு தெண்டல்
06/06/2022 தீர்த்தம் எடுத்தலும் மடையும்
08/06/2022 புதன் கிழமை மடை
10/06/2022 வெள்ளி கிழமை மடை
12/06/2022 காட்டா விநாயகர் ஆலய பொங்கல்
13/06/2022 வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல்
17/06/2022 பக்தஞானி பொங்கல்