முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டு பகுதியில் கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி இருவரையும் ஒட்டுசுட்டான் பொலீசார் நேற்று 27.05.2022 மாலை கைதுசெய்துள்ளார்கள்.
ஓட்டுசுட்டான் தொட்டியடிப்பகுதியில் வீதிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட பொலீசார் உந்துருளியில் சந்தேகமான முறையில் சென்ற கணவன் மனைவி இருவரையும் சோதனை செய்தபோது ஒரு கிலோ 360 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்தி செல்ல முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது 40 அகவையுடய குடும்பபெண்டும் அவரது கணவரான 49 அகவையுடைய முத்துஜயன் கட்டினை சேர்த இருவரையும் கைதுசெய்துள்ளதுடன் அவர்களை இன்று28.05.2022 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
Follow on social media