எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு 8,500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஊடாக இந்த எரிவாயுத் தொகை இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18-ம் திகதி முதல் உற்பத்தி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Follow on social media