கொரோனா தொற்றாதா அதிசய மனிதர்கள் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலருக்கு, இதுவரை கொரோனா தொற்றவில்லை என்ற அதிரும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் இவர்களில் பலர் பெண்கள் என்றும், அவர்களில் சிலர் வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளை பராமரிப்பவர்கள் என்றும் அறியப்படுகிறது.

அது போக சிலர் இதுவரை எந்த ஒரு தடுப்பூசியும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களை இதுவரை கொரோனா தாக்கவும் இல்லை.

இவர்கள் தொடர்பாக புது ஆராட்சியில் இறங்கியுள்ளார்கள் விஞ்ஞானிகள். இவர்களின் ரத்தம், மரபணு என்பன மிக மிக பழைய மனிதர்களுடையதாக இருக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். கொரோனா வைரஸ் உடலில் புகுந்தாலும், ஒரு சில மணி நேரத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு தன்மை, அதனை நிர்மூலமாக்கி விடுகிறது.

இதனால் அவர்களுக்கு. … மேற்கொண்டு..காய்ச்சல் , உடல் வலி என்று எந்த ஒரு பக்க விளைவுகளும் இருப்பதே இல்லை. இப்படியான நபர்களை தேடிக் கண்டு பிடித்து அவர்கள் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்து வருகிறார்கள், விஞ்ஞானிகள்.

உண்மையில் இது வியக்க தக்க விடையம் தான். இது வரை உலகில் 46 பேர் இவ்வாறு இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் உடலில் அப்படி என்ன , அதீத சக்த்தி இருக்கிறது ? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting