முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி – 3 படகுகள் 9 மீனவர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

26.04.23 அன்று இரவு முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று படகுகளையும் அதில் இருந்த 9 மீனவர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினரும் கடற்படையினரும் இணைந்து நடத்திய இந்த சோதனை நடவடிக்கையின் போது நாயாறு கடற்பரப்பில் சுருக்குவலையினையும் ஒளிபாச்சி பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று படகுகளை கைதுசெய்துள்ளார்கள்.

இதில் கைதான 2 மீனவர்கள் கொக்கிளாய் பகுதியினை சேர்ந்தவர்களும் 7 மீனவர்கள் முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியினை சேர்தநவர்ளும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான மீனவர்களையும் சான்று பொருட்களையும் இன்று 27.04.23 முல்லைத்தீவு மாவட்ட நீதனான் நீதிமன்றில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் முன்னிலைப்படுத்தியபோது மீனவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting