நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க, இன்று (03) அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
“இன்று (03) காலை ஜனாதிபதி விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து அதிகாரிகளுடனான மீளாய்வுக்கு சென்றார். விவசாயிகள் உரம் வாங்குவதற்கு, தேவையான தகவல்களைப் பெறுவதற்கு, QR குறியீட்டு முறையை அமல்படுத்துமாறு அறிவுறுத்தினார். அது நிறைவு பெற்றதும், குறித்த தொகை வங்கி முறை மூலம் செயல்படுத்தப்படும், ”என்று செயலாளர் கூறினார்.
எனவே, உர மானியம் வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Follow on social media