முல்லைத்தீவில் 22 வயது யுவதியை காணவில்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

22 வயதுடைய குறித்த யுவதி வீட்டில் இருந்து காணாமல் போன போது சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார்.

சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் காணாமல் போன நிலையில் பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை யுவதி கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0760777615 , 0740961230

Follow on social media
CALL NOW Premium Web Hosting