யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 72 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் விசாரணைகளின் பின்பே பூரண தகவல்களை வெளிப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தொிவித்துள்ளனர்.
Follow on social media