மட்டக்களப்பில் சிசுவின் சடலம் மீட்பு – 15 வயதான சிறுமியும் 29 வயது நபரும் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் இருந்து சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குழந்தையை பிரசவித்த 15 வயதான சிறுமியும் கர்ப்பமாக்கிய டெங்கொழிப்பு பிரிவில் கடமையாற்றும் 29 வயதான உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்று நேற்று (24) செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டது.

அந்த சிசுவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் சுகாதாரதுறையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் ஆண்ணொருவர், அந்தப் பகுதியிலுள்ள வீடுகளை சோதனை நடவடிக்கைக்காக சென்ற போது, புதிய காட்டுப்பள்ளி வீதியிலுள்ள வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

அப்போது15 வயதான சிறுமியுடன் தொடர்பு ஏற்படுத்தி, அச்சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

கர்ப்பமடைந்த சிறுமி, பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் நேற்று (24) காலை 9 மணியளவில் சிசுவை பிரசவித்துள்ளார்.

தனது வீட்டில் வைத்தே சிசுவை பிரசவித்த அச்சிறுமி, வீட்டுக்கு அருகிலுள்ள பாழடைந்த காணியில் அச் சிசுவை வீசியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசார​ணையில் இருந்து தெரியவந்துள்ளது

இதனையடுத்து 29 வயதான உத்தியோகஸ்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​அத்துடன் கைது செய்யப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting