புத்தளம் – கல்பிட்டி குட்வா ஓஷன் வியூ பீச் சுற்றுலா விடுதிக்கு அருகில் உள்ள கடற்கரையில் இன்று காலை 14 திமிங்கலக் குட்டிகள் கரை ஒதுங்கியுள்ளது.
எனினும் அதில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்ததாகவும் கல்பிட்டி வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கரைக்குவந்த 11 திமிங்கலக் குட்டிகள் மிகுந்த முயற்சியுடன் கடலுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதே அலுவலகம் கூறுகிறது.
இந்த திமிங்கலங்கள் திமிங்கல பைகலாட் கௌல்பஸ் இனத்தைச் சேர்ந்தவை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
Follow on social media