முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் அதிகரிக்கும் போதைப் பாவனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ள சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முல்லைத்தீவில் பிரபல்யமன பாடசாலை ஒன்றில் தரம் 10 மற்றும் 11ல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாடசாலையில் வைத்து போதை நுகர்வது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் சிகரெட் பாதுகாப்பாக அடைத்துவரும் வெள்ளை மற்றும் மஞ்சள் கலந்த தாளில் ஒருவகையான தூள் கலந்து அந்தப் பொருளினை சூடேற்றி அதிலிருந்து வெளிவரும் புகையினை மணக்கும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரிந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருவதாக அறியக் கிடைத்துள்ளது. குறித்த பாடசாலையில் பெண் மாணவிகளும் கல்வி கற்கின்ற நிலையில்

ஒரு சில ஆண் மாணவர்களின் செயற்பாடுகளால் ஏனைய மாணவர்களுக்கும் அசொகரியத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 20 மேற்பட்ட மாணவர்கள்

தமது கைகளை பிளேட்டினால் வெட்டிய பின்னணியில் போதைப் பொருள் பாவனையே இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அகவே எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி குறித்த பாடசாலையில் இடம்பெறும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு

உரிய தரப்பினர் தலையீடு செய்யவேண்டும் என நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting