தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் கடந்த செவ்வாயன்று போக்குவரத்து விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண் இறுதிச் சடங்கில் எதிர்பாராத விதமாக உயிர்ப்பித்தார்.
பெருவின் லம்பாயெக் என்ற இடத்தில விபத்துக்குள்ளான 36 வயது ரோசா இசபெல் என்பவர் பாடுகட்டமடைந்துள்ளார், அவரோடு பயணித்த மைத்துனர் உயிரிழந்தார்.
மேலும் அவரது மூன்று மருமகன்களும் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் படுகாயமடைந்த அனைவரும் லம்பேக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரோசா இசபெல் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ரோசா இசபெலின் இறுதி சடங்கில் பங்கேற்ற அவரது உறவினர்களுக்கு சவப்பேழையிலிருந்து சத்தம் கேட்டுள்ளது.
அதனையடுத்து சவப்பேழையை திறந்தபோது அதனுள் ரோசா இசபெல் உயிருடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்பு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட சில மணி நேரத்தில் மீண்டும் உயிரிழந்தார். மேலும் ரோசாவின் இரண்டாவது மரணம் வைத்தியசாலையின் அலட்சியத்தால் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தார் குற்றம்சாட்டினர்.
Follow on social media