அகதியாக சென்ற இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தமிழக பொலிஸ்காரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கை பெண் அகதி வீட்டிற்குள் இரவில் நுழைந்த போலீஸ்காரரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு பைப்பர் படகில் அகதியாக வரும் இலங்கை தமிழர்கள் 80 பேரை பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து மார்ச் 22 ஆம் திகதி மர்மப் படகில் ஒரு இளம்பெண் உள்பட 6 பேர் தனுஷ்கோடி வந்தனர். மெரைன் போலீசார் விசாரணைக்கு பின், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் புத்தளத்தை சேர்ந்த அந்த பெண் கணவரை பிரிந்து வாழும் நிலையில், தனது இரண்டு குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ளார். அப்பெண்ணிடம் பழகி வந்த மண்டபம் மெரைன் போலீஸ்காரர் அன்பு, கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு மது போதையில் வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். அப்பெண் மறுத்ததையடுத்து அன்பு அங்கிருந்து தப்பி சென்றார்.

இது குறித்து அப்பெண் மற்றும் அப்போது முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அளித்த புகாரின் அடிப்படை அன்புவிடம், மெரைன் ஏடிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விசாரித்தனர். விசாரணை அறிக்கை படி மாவட்ட காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அன்புவை தற்காலிக பணியிடை மாற்றம் செய்து ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.

பொருளாதார நெருக்கடியால் உணவின்றி அகதியாக தமிழம் வந்த இலங்கை தமிழ் பெண்ணிடம் மரைன் காவலர் மது போதையில் தவறாக நடக்க முயன்ற சம்பவம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting