விஜய் சேதுபதியுடன் நடிப்பது உண்மையா? – டாப்சி விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

டாப்சி நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதை, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் டாப்சி நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது: விஜய் சேதுபதியுடன் புதிய படத்தில் நான் இணைந்து நடிப்பது உண்மை தான். ஓராண்டுக்கு முன்பே இந்த படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன். நான் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் பிடிவாதமாக இருக்கிறார். கதையும் எனக்கு பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜெய்பூரில் தொடங்க உள்ளது. இது ஒரு முழுநீள காமெடி படம். எனவே ஒரேகட்டமாக 28 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம், எனக் கூறியுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும்  இந்தப் படத்தினை இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இவர், பிரபல நடிகரும், இயக்குனருமான சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow on social media
CALL NOW

Leave a Reply