விஜயின் மகனுடன் இணையும் துருவ் விக்ரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

2019இல் வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் துருவ் விக்ரம்.

நடிகர் விக்ரமின் மகனான இவர், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் படத்தில் அவருடைய தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் துருவ் விக்ரம் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது, “சிறு வயதிலிருந்தே நானும் விஜய் சாருடைய மகன் சஞ்சய்யும் நல்ல நண்பர்கள், அவர் நல்ல கதையுடன் வந்தால் அந்த படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் அந்தப்படம் பொலிவூட் படங்களை போல இரண்டு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply