யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (4) மேலும் ஐவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும் கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது.
சமூக வலைத்தளங்கள்