கொரோனா அச்சம் காரணமாக மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையின் 12ஆம் இலக்க வார்ட் அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனைத் அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார்.
குறித்த நோயாளர் அறையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவருக்கும், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்தே அந்த வார்ட் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.
Follow on social media