பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

போலி நாணயத் தாள்கள் புழக்கம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிசார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பஹா – தாரலுவ பகுதியில், 29 வயது நபரிடமிருந்து, 1,000 ரூபா நாணயத் தாள்கள் 34 உம், சில 5,000 ரூபா நாணயத்தாள்களும் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், குறித்த நபர் போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்திய, கணினி உள்ளிட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், போலி நாணயத்தாள்கள் குறித்து, பொதுமக்களும், வர்த்தகர்களும் அவதானத்துடன் இருப்பதுடன், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply