க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் போலியதான நேர அட்டவணை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில் அவை குறித்து மாணவர்கள் அவதானமாக இருக்கவேண்டும். என பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது.
போலியான நேர அட்டவணை காரணமாக பரீட்சார்த்திகள் தாமதமாக பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வரும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சரியான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
குறித்த போலி நேர அட்டவணையினால் பரீட்சார்த்திகள் ஏமாற்றமடைவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Follow on social media