நாளையதினம் திறக்கப்படவுள்ள வசாவிளான் வீதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியானது நாளையதினம் (01.11.2024) திறந்து வைக்கப்படவுள்ளது. இராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள குறித்த வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் திரு.வேதநாயகன் அவர்கள் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுடனான சந்திப்பின்போது குறித்த வீதியை நிறைந்து வைத்து, மக்களின் போக்குவரத்துக்கு வழி சமைக்குமாறு கோரிக்கையை முன்வைத்தார்.

அந்தவகையில் நாளையதினம் குறித்த வீதியானது யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting