தமிழகத்தில் இன்று 910 பேருக்கு கொரோனா – 11 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,007 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 99 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12,146 ஆக அதிகரித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting