சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச்சான்றிதழை வாங்க மறுத்த இளைஞர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச்சான்றிதழை இளைஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வில் குறித்த சர்ச்சை ஏற்பட்டது. குறித்த நிகழ்வின் இறுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கப்பட்ட குறித்த வெற்றி சான்றிதழ் முழுக்க முழுக்க சிங்கள மொழியிலேயே காணப்பட்டது. இந்நிலையில் குறித்த நிகழ்வின் நிறைவின் பின்னர் அச்சான்றிதழ் தனி சிங்கள மொழியில் காணப்பட்டமை தொடர்பில் இளைஞர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மன்ற உதவி பணிப்பாளர் தபேந்திரன் குறிப்பிடுகையில்,

குறித்த சான்றிதழானது அவசர அவசரமாக இளைஞர்களிற்கு வழங்குவதற்கான நேற்று வரவழைக்கப்பட்டது. குறித்த சான்றிதழானது இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியமானவர்களின் ஒப்பத்துடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், கொவிட் 19 காலப்பகுதியில் எழுதுவினைஞர் அனைவரும் சிங்கள மொழி எழுதுவினைர்கள் மாத்திரமே கடமையில் இருந்துள்ளதாகவும். தமிழ் ஊழியர்களை அழைக்க முடியாது போனமையாலுமே இவ்வாறான சிக்கல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மாகாண உதவி பணிப்பாளர் மற்றும் மாவட்ட உதவி பணிப்பாளர்களின் கையொப்பத்துடன் அவர்களிற்கு தேவையான மொழியில் சான்றிதழ்களை வழங்குமாறு தலைமை காரியாலயத்திலிருந்து அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்தார்

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply