அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மாங்குளத்தில் ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாங்குளம் நகர் பகுதியில் இன்று காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

எமது உறவுகளை சிறைகளில் மடிய விட வேண்டாம், தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதிகள் இல்லை, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தமிழர்களுக்கு ஜனாதிபதியின் பொங்கல் பரிசு, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குக போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்று போராட்டக்காரர்கள் மத்தியில் வாசிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply