அவிழ்ந்தது பேரழகி கிளியோபாட்ரா “மர்மம்” – புதைந்து கிடக்கும் ரகசியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பல நூறு ஆண்டுகளாக நமக்கு மர்மமாகவே இருந்த ராணி கிளியோபாட்ரா குறித்து சில முக்கிய கண்டுபிடிப்புகளை இப்போது ஆய்வாளர் ஒருவர் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

உலகில் மிகவும் பழமையான நகரங்களில் கொண்ட நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும். இது ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய நாடு.

எகிப்து என்ற உடன் நம்மில் பலருக்கும் அங்குள்ள பிரம்மாண்ட பிரமிடுகள் தான் நினைவுக்கு வரும். உலகமே வியக்கும் வகையில் இந்த பிரமிடுகளைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு உள்ளது.

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாகரிகம் தான் இந்த பண்டைய எகிப்து நாகரிகம். இது நைல் பள்ளத்தாக்கில் அருகே கிருத்துவ பிறப்பிற்கு முன்னரே செழிப்பாக இருந்த நாகரீகங்களில் ஒன்றாகும். நவீன உலகத்திற்கும் பண்டை எகிப்து நாகரிகத்திற்கும் இடையே தொடர்பு குறித்து தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றான வரும் பிரமிடுகள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிரமிடுகளில் தான் பண்டைய எகிப்து மன்னர்களில் உடல்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. பிரமிடுகள் கண்டறியப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் கூட அதில் பல ரகசியங்கள் புதைந்தே கிடக்கிறது. இது தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய தபோசிரிஸ் மாக்னா கோவிலுக்குக் கீழே ஒரு ரகசிய சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்துள்ளனர். பண்டைய எகிப்தை ஆண்ட கடைசி ராணியான கிளியோபாட்ராவின் கல்லறை எங்கு உள்ளது என்று யாருக்கும் தெரியாது.

இதற்கிடையே இந்த சுரங்கப் பாதை மர்மமாக இருக்கும் ராணி கிளியோபாட்ராவின் சுரங்கப்பாதைக்கு வழிவகுக்கும் கூறப்படுகிறது,
இந்த சுரங்கப்பாதை ஆறு அடி உயரம் கொண்டதாக உள்ளது. மேலும், இந்த சுரங்கப்பாதை சுமார் ஒரு மைல் வரை நீண்டுள்ளது. எந்தவொரு நவீன கருவிகளும் இல்லாத பண்டைக் காலத்தில் இவ்வளவு நேர்த்தியாக இந்தளவுக்கு பெரியதொரு சுரங்கத்தைக் கட்டியதை அதிசயம்’ என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த சுரங்கம் குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சான் டொமிங்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேத்லீன் மார்டினெஸ் கூறுகையில், ‘கிளியோபாட்ராவும் அவரது காதலர் மார்க் ஆண்டனியும் பண்டைய எகிப்திய தலைநகர் அலெக்ஸாண்டிரியாவுக்கு அருகில் உள்ள இந்த கோயிலில் அடக்கம் செய்யப்பட வாய்ப்புகள் மிக அதிகம். இதை உறுதி செய்ய ஆய்வுகளை நடத்தி வருகிறோம். அவர்கள் புதைக்கப்பட்ட இடம் மட்டும் உண்மையாக இருப்பின், அது இந்த 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளாகவே நான் கிளியோபாட்ரா குறித்து தீவிரமான ஆய்வுகளைச் செய்து வருகிறேன். இதன் காரணமாகவே இந்த கோயிலில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்ற முடிவுக்கு வந்தேன். இதை உறுதி செய்யவே நான் எகிப்திற்கு வந்தேன். கடந்த 3 மாதங்களாக நான் இந்த இடத்தை ஆய்வு செய்தேன். அதன் பின்னரே கிளியோபாட்ராவின் கல்லறைக்கு இது சரியான இடம் என்பதை உணர்ந்தேன்.

இதுவரை இந்த சிந்தனை யாருக்கும் வரவில்லை. எகிப்தின் கடைசி ராணி கிளியோபாட்ரா இங்கே அடக்கம் செய்யப்பட ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தாலும் கூட, அதைத் தேடும் கடமை நம்முடையது’ என்றார்.

பண்டைய எகிப்தை ஏறக்குறைய 300 ஆண்டுகளாக ஆண்ட டோலமிகள் என்று அழைக்கப்படும் ஆட்சியாளர்களில் கடைசி ராணியாக கிளியோபாட்ரா கருதப்படுகிறார்.. அவர் எகிப்து, சைப்ரஸ், இப்போது இருக்கும் லிபியாவின் சில பகுதிகளைக் கொண்ட பேரரசை ஆட்சி செய்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply