கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு தமிழ் இளைஞர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட போலி விசாக்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இரு இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மற்றும் முள்ளிவாய்க்கால் பிரதேசங்களை சேர்ந்த 25, 27 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.

இவர்கள் நேற்று காலை 07.30 மணியளவில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளனர்.

விமான அனுமதிக்கான சோதனையின்போது இவர்களது ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சோதனையின்போது விசாக்கள் போலியான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டமை உறுதிசெய்யப்பட்டதோடு, அவை கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள தரகர் ஒருவரால் தயாரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைதான இளைஞர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply