இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கை – சீனா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதப்படுத்த இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புக்கான நம்பிக்கையை அதிகரிக்கவும், ஸ்திரப்படுத்துவதற்கும் இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யியை நியூயோர்க்கில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சீனாவும் இலங்கையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஆதரவையும் தொடர்ந்தும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறையாண்மை மற்றும் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களில் சீனா இலங்கையுடன் இணைந்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply