நீர்ப் பம்பியை திருடிச் செல்ல முற்பட்ட இளைஞன் அடித்துக் கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சூரியவெவ – வெவேகம பகுதியில் திருடச் சென்ற இளைஞரொருவர், பிரதேச மக்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் 2ஆம் திகதி அதிகாலை மேலும் இருவருடன் காணியொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நீர்ப் பம்பியை திருடிச் செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்களால் குறித்த இளைஞர் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சூரியவெவ பொலிஸ் அதிகாரிகள் வந்த போது சந்தேகநபரின் உடல்நிலை மோசமடைந்திருந்ததை அடுத்து அவர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த இளைஞர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சூரியவெவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting