கிளிநொச்சியில் செல்லப்பிராணியை காப்பற்ற கிணற்றில் இறங்கிய இளைஞன் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய சிரேஸ்ட ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வீட்டு நாய் கிணற்றில் விழுந்துள்ளது.

குறித்த நாயை மீட்பதற்காக குறித்த இளைஞன் பாதுகாப்பற்ற குறித்த கிணற்றில் தும்பு கயிறை பயன்படுத்தி இறங்கியுள்ளார்.

கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த குறித்த இளைஞன் மேல் ஏறாத நிலையில் தந்தை அயலவரின் உதவியுடன் தேடியுள்ளார்.

சேற்றில் புதைந்த நிலையில் குறித்த இளைஞன் மாட்டிக்கொண்டமையால் உயிர் இழக்க நேரிட்டுள்ளது.

இந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் நீர் இறைக்கப்பட்டு குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

24 வயதுடைய விவேகாநந்தன் வேணிலவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply